விஜய் டீவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் முதன்முதலாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வருகின்ற பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் பிரபலமான அஸ்வின் குமாருக்கு இதுவரை எந்த நடிகருக்கும் நடக்காத அதிசயம் ஒன்று இந்த படத்தில் நடந்துள்ளது.
அதாவது இதுவரை எந்த நடிகருக்கும் முதல் படத்திலேயே அதிகாலை ஷோ கிடைத்தது இல்லை. ஆனால் அஸ்வினுக்கு மட்டும் அதிகாலை ஷோ கிடைத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல திரையரங்குகளிலும் ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படம் அதிகாலை 6 மணிக்கு முதல் காட்சியாக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.