ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
தேவைப்படும் ஆவணங்கள்:
விண்ணப்பதாரரின் புகைப்படம்
ஆதார் அட்டை / வாக்காளர் அட்டை / ஓட்டுநர் உரிமம்
விண்ணப்பதாரரின் பள்ளி மாற்று சான்றிதழ்
குடும்ப அட்டை
விண்ணப்பதாரரின் தம்பி/தங்கை படித்து கொண்டிருந்தால் அவர்களுடைய கல்வி சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை:
முதலில்https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும்.
Sign in பகுதியில் Franchisee Login மற்றும் Citizen Login என்று இரண்டு Option-கள் கொடுக்கபட்டிருக்கும். அதில் Citizen Login என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும
பிறகு அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள New User Option-ஐ கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். (குறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்.)
விபரங்கள் அனைத்தையும் நிரப்பிய பிறகு நீங்கள் கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு OTP (One Time Password) எண் வரும், அதை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் பதிவு செய்த Login மற்றும் Password-ஐ கொடுத்து உள்நுழைய வேண்டும்.
Login செய்த பினனர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் செய்து First Graduate Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வு செய்த பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு படித்து Proceed பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
இவை அனைத்தையும் முடித்த பிறகு, Register CAN ஈஸ்ன்ற பட்டானை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தையும் சரியாக நிரப்ப வேண்டும்.
இப்போ நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு CAN Registration Number Message-யாக வரும், அந்த எண்ணை CAN Register கட்டத்தில் கொடுத்து Proceed பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும் அதை உள்ளீடு செய்து Proceed பட்டனை மீண்டும் கிளிக் செய்ய வேண்டும். (குறிப்பு: நீங்கள் கொடுத்த தகவல்களை மாற்ற விரும்பினால் Edit CAN Detail பட்டனை கிளிக் செய்து மாற்றி கொள்ளவும்)
அடுத்து நீங்கள் CAN Register பண்ணும் பொழுது நீங்கள் கொடுத்த அனைத்து விபரங்களும் வந்து விடும். அதில் Graduate Details பகுதியில் Completed Graduate from Family என்ற கேள்வியில் (Yes/No) Option இருக்கும். அதில் No என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களின் (தந்தை, தாய், தந்தையின் தந்தை, தஹ்ந்தையின் தாய், தாயின் தந்தை, தாயின் தாய், தம்பி மற்றும் இளைய சகோதரி) விவரத்தை நிரப்பிய பிறகு Education Details விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
நிரப்பிய விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறைக்கு பலமுறை சரிபார்த்த பின்னர் Submit பட்டாணி கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் List of Documents பகுதியில் (Photo, Any Address Proof, Applicant Transfer Certificate, Self Declaration of Father, Current Academic Year Certificates Young (Brother/Sister), Family/Smart Card, Self Declaration by Applicant) Mandatory Options காட்டப்படும். அதில் கொடுக்கப்பட்டுள்ள Image (50 KB) அல்லது PDF (200 KB) அளவை அறிந்து அதற்கேற்ப Upload செய்ய வேண்டும்.
அடுத்து Self Declaration Form-ஐ இரண்டாக தரவிறக்கம் செய்து அதில் விண்ணப்பதாரர் மற்றும் விண்ணப்பதாரின் தந்தை கையொப்பம் இட்ட பிறகு, அதனை Scan செய்து Upload செய்ய வேண்டும்.
அனைத்து சான்றிதழ்களையும் பதிவு செய்த பின்னர் Make Payment பட்டாணி கிளிக் செய்து ரூ. 60 கட்டணம் செலுத்த வேண்டும்.
அடுத்து அரசாங்க அலுவலகத்தில் இருந்து உங்களுடைய விண்ணப்பம் சரிபார்த்த பின்பு தங்களின் தொலைபேசி எண்ணிற்கு தகவல் வந்து சேரும், அதன்பின் TNeGA Login செய்து முதல் பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் இணைய முகவரி:
https://www.tnesevai.tn.gov.in/
பயன்கள்:
கல்லூரியில் சேரும் பொழுது அரசாங்க சலுகைகளை பெறுவதற்கு பயன்படுகிறது.