பிரபல நடிகையான நயன்தாரா 2003ஆம் ஆண்டில் வெளியான “மனசினக்கரே” மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோவாக ஜெயராமும், முக்கிய கதாபாத்திரத்தில் ஷீலாவும் நடித்திருந்தனர். நயன்தாரா கௌரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஷீலாவின் கதாபாத்திரம் படத்தின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சத்யன் அந்திக்காடு நினைத்தார். இதனால் புதுமுகம் தான் கௌரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் எண்ணினார். அந்த சமயத்தில் ஒரு மாடல் அழகியாக நயன்தாரா இருந்தார். மேலும் அவர் விளம்பர படங்களில் நடித்திருந்தார்.
அதாவது பிரபல பத்திரிக்கை ஒன்றில் அவர் நகைக்கடை விளம்பரத்திற்காக போஸ் கொடுத்திருந்த புகைப்படம் வந்திருந்தது. அதனை பார்த்த இயக்குனர் சத்யன் இந்தப் பெண் தான் கௌரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறி நயன்தாராவை படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதேபோல் நயன்தாராவும் இயக்குனர் கேட்டதுமே கௌரி கதாபாத்திரத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். நயன்தாராவுக்கு பத்திரிக்கை படத்தால் நடிகையாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் தான் நயன்தாரா தற்போது “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.