Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் போட்டியில் களமிறங்குகிறாரா மொயின் அலி?…. ரசிகர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-வது சீசன் தொடங்க உள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களமிறங்க உள்ளது. இந்த நிலையில் மொயின் அலி, சிஎஸ்கே தனது பயிற்சியை ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் அணியில் இணையாமல் இருக்கிறார். அதேபோல் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற இங்கிலாந்து அணியிலும் மொயின் அலி இடம்பெறவில்லை. இந்நிலையில் மத்திய அரசு, மொயின் அலி விசாவுக்கு ஒரு மாதம் ஆகியும் அனுமதி வழங்கவில்லை என்று தகவல் வெளியானது. எனவே இன்னமும் அவரால் இந்தியா வர முடியவில்லை.

பொதுவாக விசாவுக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளிலேயே விசா கிடைத்து விடும். ஆனால் 20 நாட்கள் ஆகியும் மொயின் அலிக்கு விசா கிடைக்காமல் இருந்துள்ளது. இதையடுத்து தற்போது பிசிசிஐ எடுத்த முயற்சிகள் காரணமாக மொயின் அலிக்கு விசா கிடைத்துள்ளது. இந்நிலையில் மொயின் அலி வெளியிட்ட வீடியோ ஒன்றில், “எனக்கு விசா கிடைத்துவிட்டது. இந்தியாவுக்கு அடுத்த விமானத்திலேயே வர உள்ளேன்” என்று கூறியுள்ளார். ஆனால் அவர் இன்றே இந்தியா வந்தாலும் தனிமை முகாமில் மூன்று நாட்கள் இருந்தாக வேண்டும். இதனால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மொயின் அலி களமிறங்க முடியாது. இரண்டாவது போட்டியில் இருந்து மொயின் அலி பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |