ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படவிருந்தது. அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 14.82 கோடி ரூபாயாகும். இந்த தங்கத்தை மத்திய சுங்கத்துறை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது. இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலம் கொடுத்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன், முன்னாள் முதன்மை செயலாளர், சரித்குமார், நளினி டெட்டோ, முதல் மந்திரியின் மனைவி கமலா, மகள் வீணா, முன்னாள் மந்திரி கே.டி ஜலீல், முதல் மந்திரியின் முன்னாள் தனிச் செயலாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது குறித்தும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மந்திரி துபாய் சென்ற போது நான் தூதரகத்தில் செயலாளராக இருந்தேன். அப்போது என்னை சிவசங்கர் தொடர்பு கொண்டார். அவர் என்னிடம் முதல்-மந்திரி ஒரு பையை மறந்து வைத்து விட்டார் எனவும், அந்தப் பையை உடனடியாகக் கொண்டு ஒப்படைக்குமாறும் கூறினார். அந்தப் பையை நான் எடுத்துச் செல்லும் போது அதில் பணம் இருந்தது எனக்கு தெரியவந்தது.
இதனையடுத்து சிவசங்கரின் அறிவுரையின் பெயரில் தூதரக அதிகாரியின் வீட்டிலிருந்து பிரியாணி பாத்திரங்கள் கிளப்ஹவுசுக்கு பலமுறை ஒப்படைக்கப்பட்டது. அதில் பிரியாணியோடு சேர்த்து உலோகப் பொருட்களும் இருந்தது. நான் உண்மைக்குப் புறம்பான விஷயங்களை கூற மாட்டேன். இந்த வழக்கில் தேவை இல்லாமல் யாரையும் நான் இழுத்து விடவில்லை. அதன்பிறகு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ரகசிய வாக்கு மூலங்களை வெளியில் சொல்ல முடியாது என ஸ்வப்னா சுரேஷ் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.