ஒரு தந்தை தனது மகனுக்கு பட்டப் படிப்பை முடிக்கும் வரை நிதியுதவி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா சுகாதாரத்துறையில் பணிபுரிந்த நபர் 2005 இல் விவாகரத்து பெற்று தனது முதல் மனைவியிடமிருந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார். மேலும் முதல் மனைவியின் குழந்தைக்கு பராமரிப்புக்காக மாதத்திற்கு 20000 வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. குடும்ப நீதிமன்றம் 2017 செப்டம்பரில் இந்த உத்தரவு நிறைவேறியது. தனது மகன் 18 வயது ஆகும்வரை மாதம் 20000 செலுத்தியதாக அவர் தெரிவித்தார். இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் 2019 உறுதி செய்தது.
அதை தொடர்ந்து அந்த நபர் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தான் சம்பளம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும், அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்று உள்ளதால், முதல் திருமணத்தில் இருந்து பெற்ற மகனுக்கு 20,000 செலுத்துவது என்பது மிகவும் சிரமமாக இருப்பதாக அவர் வாதிட்டார். திருமணத்தை மீறி வேறு ஒரு பந்தத்தை நீங்கள் செய்தது உங்கள் தவறு. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்ட போதும் முதல் மனைவி குழந்தை ஆதரிக்க வேண்டியது உங்கள் கடமை என்று அவர் தெரிவித்தார். 18 வயது வரை மட்டுமல்லாமல் பட்டம் பெறும் வரை அவரின் மகனுக்கு மாதம் 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 2023 மார்ச் 31 வரை மகனின் கல்வி பணம் செலுத்துமாறு உத்தரவிட்டது.