Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதல் மனைவியுடன் உறவு…. 2ஆவது மனைவியை கொன்ற கணவன்… சென்னையில் பரபரப்பு சம்பவம் …!!

முதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் ஏற்பட்ட சண்டையில் இரண்டாவது மனைவியை கணவன் இரும்பு பைப் மூலம் அடித்துக் கொலை செய்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆவடி அடுத்த மேல்பாக்கம் பஜனை கோவில் தெருவில் வசித்த சரிதா, தனது முதல் கணவரை விட்டுவிட்டு மதன் என்பவரை கடந்த 3 ஆண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார். மதனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். சரிதா தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷர்மிலியை தன்னுடனேயே வைத்துள்ளார்.

சரிதா மற்றும் மதனுக்கு மேகிளீனா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக மதன் அவரது முதல் மனைவி மற்றும் மகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரிதா இதுகுறித்து சண்டை போட்டுள்ளார். இந்த தகராறில் மதன் சரிதாவை இரும்பு பைப் மூலம் தாக்கியுள்ளார். இதில் சரிதா உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து 7 மாதக் குழந்தையுடன் மதன் தப்பியோடியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொரட்டூர் அருகே ஆட்டோவில் வந்த மகனை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |