Categories
தேசிய செய்திகள்

முதல் மனைவி தலைமையில் கணவருக்கு 2வது திருமணம்…. எதற்காக தெரியுமா?…. நம்ப முடியாத ஓர் அதிசயம்….!!!!

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரில் வசித்து வரும் கல்யாண் டிக் டாக்கில் பிரபலமானவர். இவர் அடிக்கடி வீடியோக்கள் எடுத்து டிக் டாக் மற்றும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு வீடியோக்கள் எடுப்பது வாயிலாக தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த தொடர்பு காதலாக மாறி சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இரண்டு பேருமே டிக்டாக் வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகின்றனர்.

இரண்டு பேருக்கும் டிக்டாக்கில் பின் தொடர்பவர்கள் அதிகம் இருக்கின்றனர். அவ்வாறு வீடியோக்களை உருவாக்கி அவர்கள் அதிக பிரபலமடைந்தனர். சில மாதங்களாக விமலா சோகமாக இருந்துள்ளார். ஏன் சோகமாக இருக்கிறாய் என்று விமலாவிடம் பல முறை கல்யாண் கேட்டுள்ளார். அப்போதுதான் விசாகபட்டனத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவர் தன்னை சந்தித்தகா விமலா கூறினார். இதனிடையில் கல்யாண் திருமணத்திற்கு முன்பாக விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவருடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ உருவாக்கி வந்துள்ளார்.

அத்துடன் இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். சிலகாலம் நன்றாக இருந்த காதல் பின் சில காரணங்களால் முறிந்துவிட்டது. அதனை தொடர்ந்து கல்யாண் அவரை மறந்துவிட்டு விமலாவை மணந்துள்ளார். தற்போது திடீரென நித்யாஸ்ரீ இவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்துள்ளார். நேரடியாக விமலாவிடம் சென்று விபரத்தை கூறி இருக்கிறார். சென்ற காலத்தில் இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாகவும், அவரைவிட்டு பிரிந்து செல்ல முடியவில்லை எனவும் நித்யாஸ்ரீ கதறி அழுதாள்.

அத்துடன் எப்படியாவது எங்களை ஒன்றுசேர்த்து வைத்துவிடு என்று கெஞ்சினாள். இதனால் எந்த மனைவியும் செய்யாத ஒரு தியாகத்தை விமலா செய்ய தயாராகிவிட்டார். அதாவது விமலா தன் கணவர் கல்யாணை அவரது காதலி நித்யாஸ்ரீயை திருமணம் செய்து வைக்க தயாரானார். எனினும் தானும் அவர்களுடன் இருக்கவேண்டும் என சத்தியம் வாங்கிகொண்டார்.

இந்நிலையில் கல்யாண், 2வது திருமணம் செய்து கொண்டார். தற்போது 3 பேரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதனிடையில் திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதல் மனைவியே முன்னின்று கவனித்தது தான் இங்கு சிறப்பு. இதனால் விமலா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். இதற்கிடையில் திருமணம் முடிந்து 3 பேரும் எங்கே சென்றார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆகிவிட்டது.

Categories

Tech |