Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முதல் மனைவி தொடர்ந்த வழக்கு…. ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிபதி அதிரடி உத்தரவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு ராணுவத்தில் வேலை பார்த்த போது முருகன் அவரது மனைவி செண்பகத்திடம் கூடுதல் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். பின்னர் முருகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து செண்பகம் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி முருகனுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் முருகனின் சகோதரி கம்சலா, அதே பகுதியை சேர்ந்த கல்யாணி, காந்திமதி, கண்ணையன் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Categories

Tech |