கார்த்தி சர்தார் திரைப்படத்தில் முதல் முறையாக மித்ரனுடன் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் தற்போது மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். பெர்சிய மொழியில் சர்தார் என்றால் படைத்தலைவன் எனப் பொருள். சர்தார் ஒரு துப்பறியும் திகில் கதை. உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடு விட்டு நாடு நடக்கிறது தான். ஆனால் நம்மை சுற்றிய அவ்வளவு உளவாளிகள் இருக்கின்றார்கள். உளவு என்பது நாட்டின் ராணுவ ரகசியம் தெரிந்து கொள்கிற வேலை மட்டுமல்லாமல் நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்து கூட அதை ஆரம்பிக்கலாம். ரொம்ப சிம்பிளான இடத்தில் இருந்து தொடங்கி மிகப்பெரிய இடம் வரை இந்த உளவு இருக்கின்றது. கார்த்தி சிறுத்தையில் விரைப்பும் ஜாலியாக இரண்டு கதாபாத்திரத்திலும் நடித்தார். இதில் ஜாலியான போலீஸ்காரன் அலப்பறையாக இருந்தது.
வயதான அப்பாவாக கார்த்தி கனகச்சிதமாகவும் இளமை வயதானவர். இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும் மூன்று மணி நேரம் மேக்கப் அந்த மேக்கப் போட்டு வசனம் பேசி நடிப்பதே கஷ்டம். இதில் சண்டை காட்சியும் இருக்கும். ரொம்பவே கஷ்டம். இப்படி மெனக்கெட்டு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றார் கார்த்தி. ராஷிகண்ணா, ரஷிஷா விஜயன் நடித்த இரண்டு பேருக்கும் முக்கிய கதாபாத்திரம். மற்றொரு முக்கிய வேடத்தில் லைலா நடித்துள்ளார். கார்த்தியின் திரைப்படங்களிலேயே அதிக பட்ஷட்டில் இந்த படத்தை தயாரித்துள்ளார் எஸ் லட்சுமணன் குமார். இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகும்.