Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முதல் முயற்சியிலேயே டிஎஸ்பி…. சாதித்த சாதனைப் பெண்….. குவியும் பாராட்டு……!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு செட்டியாபட்டியை சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் பவானியா. இவர் குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார்.கல்லூரி படிப்பையும் அரசு கலை கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தார். இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வில் பயிற்சி மையத்திற்கு செல்லாமலேயே படித்து வென்றார். அதன் பிறகு சென்னையில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் சேர்ந்து இலவச பயிற்சி பெற்றார்.

பின்னர் கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்பில் படித்து முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது டிஎஸ்சியாக பொறுப்பேற்க உள்ளார் இவர்.லட்சக்கணக்கானோர் எழுதும் குரூப்-1 தேர்வில் முதல் முயற்சி இலையே அவர் இந்த வெற்றியை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது என்றும் குக்கிராமத்தில் பிறந்து டிஎஸ்பி ஆக உயர்ந்து நிற்கும் இவர் வாழ்வில் மென்மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்து மகிழ்விக்கிறேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டையை சேர்ந்தவருமான விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |