Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல் முயற்சியே தோல்வியை ஆயிடுச்சு… பேசாம அதை விட்டுவிட வேண்டியது தானே… ராமதாஸ் அட்வைஸ்…!!!

ரயில்களை தனியார்மயமாக்கும் திட்டங்களை தெற்கு ரயில்வே கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தாராளமயமாக்கல் என்பதே தற்போது தனியார்மயமாக்கல் என்பது போல் ஆகிவிட்டது.  தொடர்வண்டி சேவைகளை தனியார் மயமாகும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 150 தொடர்வண்டிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானம் செய்து உள்ளது.

அவற்றில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில் வண்டிகள், கன்னியாகுமரியில் இருந்து எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் 13 ரயில் வண்டிகளை தனியார்மயம் ஆக்குவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில் எந்த நிறுவனமும் அதை வாங்குவதற்கு முன்வரவில்லை. மும்பையில் சில தொடர் வண்டிகள் மட்டுமே ஐஆர்சிடிசி நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. தனியார் மயமாக்கப்பட்ட  தொடர்வண்டிகள் 95%  கூடுதலானவற்றை ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இது மத்திய அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம். ஆனால் நீண்ட தொலைவு பயணத்திற்கு தொடர் வண்டிகளை நம்பியிருந்த மக்களுக்கு கிடைத்த வெற்றி.

இந்தியாவை பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகமானோர் தொடர்வண்டி சேவைகளை நம்பி உள்ளனர். பேருந்துகளை ஒப்பிடும்போது மிகக் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்கு ரயில் வண்டி சேவை மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளது. தொடர்வண்டிகளை தனியார் மயமாக்கும் முயற்சி தோல்வி அடைந்திருந்தாலும், அது தற்காலிகமானது தான். மத்திய அரசு தொடர் வண்டிகளை தனியார்மயமாக்கும் வாய்ப்புகளை இன்னும் முழுமையாக விலகவில்லை. தொடர் வண்டிகளை இயக்குவதற்கு தனியார் நிறுவனங்கள் முன்வராததை காரணம் காட்டி நிபந்தனையை ரத்து செய்யவும், அதிக எண்ணிக்கையிலான தொடர்வண்டிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முன்வரும்.

அது மக்களுக்கு, மத்திய அரசுக்கு நன்மை அளிப்பதாக இருக்காது.. மாறாக தனியார் நிறுவனங்கள் இந்திய மக்களையும், தொடர்வண்டியின் கட்டமைப்புகளையும் சுரண்டுவதற்கு வழிவகை செய்யும். தனியார் மயமாக்கும் முயற்சி தோற்றது தோற்றதாகவே இருக்கட்டும். மத்திய அரசு மீண்டும் அந்த முயற்சியை தொடங்கக்கூடாது” என்று கேட்டுக் கொண்டுள்ளார்

Categories

Tech |