சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் நடைபெற உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை ஒருமுறைகூட இந்தியாவில் நடத்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது 2022ஆம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிறது.