மும்பையில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. மகா சக்தி அறக்கட்டளை சார்பில் உருவாகியுள்ள இந்த பள்ளியில் 25 பேர் கல்வி பயில்கின்றனர். சமூகத்தில் இன பாகுபாட்டை எதிர்கொள்ளும் திருநங்கைகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 5 லட்சம் திருநங்கைகள் இருப்பதாக தெரிய வந்த போதிலும் உண்மையில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை எங்கும் இல்லாத வகையில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு பள்ளிக்கூடம் திறக்க பட்டிருப்பது பலரின் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
Categories