Categories
மாநில செய்திகள்

முதல் முறையாக!…. தி.மு.க இளைஞரணி மன்றம் திறந்த கிராம மக்கள்…. எதற்காக தெரியுமா?….!!!!!

தி.மு.க-வின் கொள்கைகள் மற்றும் வரலாறு கடைக்கோடி கிராமங்கள் வரை இல்லாதது வருத்தம் அளிப்பதாகவும், தலைமைக்கும் தொண்டனுக்கும் இடைவெளியே இருக்ககூடாது எனவும் அதை நிரப்பி வருவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். பாரம்பரியம்மிக்க ஒரு கட்சியின் நேர்மையான தலைவராக ஸ்டாலினின் லட்சியத்தை நோக்கிய பயணம் அதுவாகும். அதை செயல்படுத்த தி.மு.க தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. திமுகவின் கொள்கைகள் மற்றும் வரலாற்றைத் தமிழகம் முழுதும் எடுத்துரைக்கும் பணியில் அந்த கட்சியின் இளைஞர் அணி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கழகத்தின் சமூக நீதி போராட்டங்கள், சாதனைகள் தொடர்பாக பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் அடிப்படையில் தி.மு.க-வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் “திராவிட பாசறை” எனும் தலைப்பில் இந்தப் பணிகள் கடைக்கோடி கிராமங்கள் வரை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் எய்ப்பாக்கம் கிராமத்தில் இதுவரையிலும் எந்த சினிமா கதாநாயகர்களுக்கும் ரசிகர் மன்றம் திறந்ததில்லை. தற்போது முதல் முறையாக இந்தக் கிராமத்தினர் தி.மு.க இளைஞரணிமன்றம் திறந்துள்ளனர்.

சாலைவசதி, பேருந்துவசதி, பள்ளிக்கூட வசதி ஆகிய கோரிக்கைகளுக்காக பல வருடங்கள் காத்துக்கிடந்த மக்கள், தங்களது தேவைகளை அரசியல் வடிவில் பெற முடிவெடுத்து இருக்கின்றனர். எய்ப்பாக்கம் கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ள தி.மு.க இளைஞரணி மன்றத்தை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் திறந்து வைத்தார். அதன்பின் மன்ற இளைஞர்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார். மன்றத்தை துவங்கிய நாளிலேயே தங்களுக்கான கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம், எய்ப்பாக்கம் மக்கள் முன் வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

அங்குள்ள பள்ளிக் கட்டிடங்களின் நிலைகளை எம்.எல்.ஏ அம்பேத்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். பள்ளி அறைகள் இன்றி மாணவர்கள் கோவிலில் படிக்கும் சூழல் இருப்பதைக் கண்ட அம்பேத்குமார், பள்ளிக்க ட்டிடத்தை மாற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். மேலும் பேருந்து, சாலை, குடிநீர் உட்பட அனைத்துத் தேவைகளையும் எய்ப்பாக்கம் மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனுவாக அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ அம்பேத்குமார், கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியுள்ளார். அதனைதொடர்ந்து தி.மு.க இளைஞரணி மன்றம் சார்பில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

Categories

Tech |