Categories
உலக செய்திகள்

முதல் முறையாக… பயங்கவாதியின் உடலை பெற்றுக்கொண்ட பாகிஸ்தான்…. என்ன காரணமாக இருக்கும்?…..!!!!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள கோட்லியை அடுத்த சப்ஸ் கோட் கிராமத்தில் வசித்து வந்தவர் தபாரக் ஹுசைன் (32). சென்ற ஆகஸ்ட் 21ம் தேதி இந்திய-பாகிஸ்தான் எல்லையின் வழியாக ஊடுருவ முயன்றபோது, இந்திய ராணுவத்தினரால் சுடப்பட்டதில் அவரது உடலில் தோட்டாக்கள் பாய்ந்து காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டாா். ரஜௌரி மாவட்டத்திலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டபோது அவரை உயிருடன் வைத்திருப்பதற்காக ராணுவ வீரா்கள் அவருக்கு 3 யூனிட் ரத்தத்தை தானம்செய்தனா்.

பின் மாரடைப்பால் உயிரிழந்த 2 தினங்களுக்கு பிறகு தபாரக் ஹுசைனின் உடல் பூஞ்ச் ​​மாவட்டத்திலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலுள்ள சகன் தா பாக் பகுதியில் காவல்துறையினா் மற்றும் இதர சிவில் அதிகாரிகளின் முன்னிலையில் இந்திய ராணுவத்தால் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 20 வருடங்களில் ஒரு பயங்கரவாதியின் உடலை பாகிஸ்தான் இப்போதுதான் ஏற்றுக்கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு உயிரிழக்கும் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்களின் சடலங்களை ஏற்க பாகிஸ்தான் எப்போதும் மறுத்துவருகிறது.

இறந்தவரின் பிரேதபரிசோதனை உள்ளிட்ட அனைத்து மருத்துவச் சட்டமுறைகளும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அதன்படி அவரது உடலைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு பாகிஸ்தான் ராணுவத்தை தொடா்புகொண்டோம் என ராணுவ அதிகாரி கூறினார். ராணுவத்தின் 80-வது காலாட்படைப் பிரிவின் தளபதி பிரிகேடியா் கபில் ராணா, நவ்ஷேரா செக்டாரிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில்தான் ஹுசைனை தடுத்து நிறுத்தும் போது சுடப்பட்டாா். ஹுசைன் மற்றும் மேலும் இருவா் இணைந்து இந்திய ராணுவ சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக பின் ராணுவத்தினரிடம் ஹுசைன் ஒப்புக்கொண்டதாகவும், இதற்காக பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்சியைச் சோ்ந்த கா்னல் யூனுஸ் சௌதரி என்பவா் தனக்கு ரூபாய். 30 ஆயிரம் பாகிஸ்தான் கரன்சியை கொடுத்து அனுப்பியதாகவும் ஹுசைன் கூறியதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Categories

Tech |