Categories
சினிமா

முதல் முறையாக பாலிவுட்டில் களமிறங்கும் பிரபல நடிகை…. வைரல் டீசர் இதோ….!!!!

தமிழ் சினிமா உலகில் இளம் நடிகராக வலம் வருபவர் அமலாபால். இவர்  தென்னிந்திய திரை உலகில் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.  அமலாபால் நடித்த தெலுங்கு வெப்சீரிஸ் குடியடமைத்தே சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கும் அமலாபால் நடிப்பில் புதிய வெப்சீரிஸ் தயாராகி வெளிவரவுள்ளது. இந்த திரைப்படம் 1970-80களில் பிரபலமான பாலிவுட் நடிகை பர்வீன் பாபியை மையப்படுத்தி உருவாகியுள்ள ரஞ்சித் ஹி சஹி வெப் சீரியஸில் பாபி கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தை மகேஷ் பட் உருவாக்கியுள்ளார். இதில் வெப்சீரிஸில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் அமலாபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புஷ்படீப் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ரஞ்சிஷ் ஹி சஹி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

 

Categories

Tech |