Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் தனுஷ்… வெளியான சூப்பர் தகவல்…!!!

சுந்தர்.சி முதல் முறையாக தனுஷுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் ரஜினியின் அருணாச்சலம், கமல்ஹாசனின் அன்பே சிவம் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் இயக்கி நடித்துள்ள அரண்மனை-3 திரைப்படம் வருகிற ஆயுத பூஜை தினத்தில் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் சுந்தர்.சி முதல் முறையாக நடிகர் தனுஷுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் - sundar c direct with dhanush

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் .

Categories

Tech |