நடிகை நயன்தாரா பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. நடிகை நயன்தாரா தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் தெலுங்கு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியானால் நயன்தாரா, மகேஷ் பாபு இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். அதில் ஒரு ஹீரோயினாக நயன்தாராவையும் மற்றொரு ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஒருவரையும் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது . இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் .