மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் வடிவேலு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . அடுத்ததாக மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தையும், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தையும் இயக்க இருக்கிறார்.
இதில் மாரி செல்வராஜ், உதயநிதி இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் வடிவேலு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறையாக மாரி செல்வராஜ் படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.