Categories
தேசிய செய்திகள்

முதல் முறையாக….”முதல்வருக்கு கொரோனா”….. பாஜகவினர் அதிர்ச்சி

நாடு முழுவதும் ஒரு மாநிலம் விடாமல் கொரோனா வைரஸ் அதன் பாதிப்பை நிகழ்த்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டிலேயே முதல் முறையாக முதல்வர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அவர் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியானதை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோன உறுதியாகி உள்ளதால் நாடு முழுதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |