சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை 3 திரைப்படத்திற்கு ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ‘அரண்மனை 3’ உருவாக்கி வருகிறது. இந்த திரைப்படத்தில் சுந்தர். சி, ஆர்யா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத் ,விவேக், மனோபாலா ,வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
முதல் முறையாக பேய் படத்துக்கு 2 கோடி செலவில் செட் அமைத்து சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. சுந்தர். சி யுடன் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் இணைந்துள்ள இந்த திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் 11 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த பேய்த்தனமான சண்டைக்காட்சியில் சுந்தர்.சி ,ஆர்யா, ராஷி கண்ணா, மதுசூதன் ராவ், சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் அடுத்த வருட சம்மர் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது.