Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் போட்டியிலேயே ஜெயிக்க நினைச்சோம்…. ஆனால் முடியாமல் போய்விட்டது…. புலம்பிய டேவிட் வார்னர்…..!!

சன்ரைசர்ஸ் அணியின் தோல்வியை குறித்து ,அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கருத்து தெரிவித்துள்ளார் .

14வது ஐபிஎல் போட்டியில் ,3வது லீக் ஆட்டமானது, நேற்று  சென்னை எம் .ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டியின் இறுதிக்கட்டத்தில் கொல்கத்தா அணி   10 ரன்கள் வித்தியாசத்தில் ,சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி  வெற்றி பெற்றது . நேற்று நடந்த  போட்டியின் ,சன்ரைசர்ஸ் அணியின் தோல்வியை குறித்து ,அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறும்போது, கொல்கத்தா அணி நிர்ணயித்த 188 ரன்கள், ஒன்றும் எங்களால் எடுக்கமுடியாத இலக்கு கிடையாது.

முதலில் கொல்கத்தா அணி வீரர்களான ராணா , திரிபாதி இருவரின் பார்ட்னர்ஷிப் கொல்கத்தா அணியின் ரன் ரேட் அதிகரிக்க, முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் எங்கள் அணி பவுலர்கள் ஒவ்வொரு ஓவரிலும் , சரியாக பவுலிங் செய்யவில்லை. இதனால் எதிரணி இதனைப் பயன்படுத்தி பவுண்டரிகளாக  அடித்து விளாசியது.அதுமட்டுமில்லாது நாங்கள் தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். ஆனால் அணியின் இறுதிக்கட்டத்தில் பேர்ஸ்டோ மற்றும் மனிஷ் பாண்டே பார்ட்னர்ஷிப் ,சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஆனால் மைதானத்தில் பனிப்பொழிவு காரணமாக ,ஆட்டத்தை சரியாக விளையாட முடியாமல் போனது. இதனால் நாங்கள் முதல் போட்டியில் தோல்வி அடைந்து உள்ளோம் என்று கூறினார். மேலும் இதே மைதானத்தில் இன்னும் 4 போட்டிகள் விளையாட இருப்பதால், இனிவரும் போட்டிகளில், சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி ,கூடிய விரைவிலேயே வெற்றிப் பாதையை நோக்கி செல்வோம் என்று கேப்டன் வார்னர் கூறினார்.

Categories

Tech |