ஜெயங்கொண்டம் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் முதியவர் ஒருவரை ஏமாற்றி மாம்பழம் சின்னத்தில் ஓட்டுப் போட வைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கண்ணன் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அண்மையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தா.பழூர் அருகே நாயகனம் பிரியாள் கிராமத்தைச் சேர்ந்த தம்புசாமி என்கின்ற முதியவரை ஏமாற்றி, இளைஞரொருவர் உதயசூரியன் சின்னத்திற்கு பதிலாக மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போட வைத்தது தெரியவந்தது.
வாக்குச்சாவடிக்கு நடந்து செல்ல முடியாததால் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மூலம் தம்புசாமி வாக்கு அளித்துள்ளார். அதனை மணிகண்டன் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.