காணாமல் போன முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வைத்தூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ரெங்கன் (80) என்பவர் வசித்து வந்துள்ளார். ஏனெனில் தீபாவளி அன்று இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ரெங்கனின் மகன் செல்வராசு காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரெங்கனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் முதியவரின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரெங்கனின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.