தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வங்கிகளில் மோசடி, ஆன்லைன் மோசடி, ஏடிஎம் கார்டு மூலம் மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தலைமையில் போலீசார் வேலூர் கோட்டை சுற்றுலா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் ஏடிஎம் கார்டுகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் ஏடிஎம் கார்டு மையங்களுக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை நூதன முறையில் ஏமாற்றி ஏடிஎம் கார்டில் பணத்தை அபேஷ் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணையில் அவர் காட்பாடி வடுகன் தாங்கள் அருகே உள்ள விளாங்கி பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தெரிய வந்திருக்கிறது அதன்பின் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது பற்றி போலீசார் பேசும்போது கைது செய்யப்பட்ட சுரேஷ் வேலூர், ஆம்பூர், பள்ளிகொண்டா, அணைக்கட்டு போன்ற பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி இருக்கின்றார். மேலும் ஆந்திர மாநிலம் சித்தூரிலும் ஏராளமானவர்களிடம் ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை அபேஷ் செய்திருக்கின்றார்.
ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வரும் முதியவர்களிடம் நம்பிக்கை இழக்கும் விதமாக பேசி தான் பணம் எடுத்து தருவதாக கூறி ஏடிஎம் கார்டு பெற்றுக்கொண்டு எந்திரத்தில் கார்டை செலுத்துகிறார். மேலும் அவர்களிடம் ரகசிய எண்ணையும் பெற்று எந்திரத்தில் தவறான ரகசிய எண்ணை போட்டு கார்டில் பணம் இல்லை என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தன் கையில் வைத்திருக்கும் மற்றொரு ஏடிஎம் கார்டை அவர்களிடம் கொடுத்து அனுப்பி விட்டு அவர்கள் ஏற்கனவே வழங்கிய கார்டினை பயன்படுத்தி பணத்தை எடுத்து சென்று விடுவார். இந்த மாதிரி பல்வேறு இடங்களில் மோசடி செய்திருக்கின்றார். இதுவரை அவரிடமிருந்து 19 வகையான 144 ஏடிஎம் கார்டுகள் 35,000 ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.