தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பபூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் 80 வயது மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 044-25384520 மற்றும் 044-48122300 ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும். குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.