விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொழப்பலூரில் பொன்னுசாமி(90) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் நடுநிலைப் பள்ளிக்கு சென்று புளியமரத்திற்கு அடியில் அமர்ந்திருந்த 11 வயதுடைய 6- ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த வழியாக சென்ற ஒரு பெண் பார்த்து சிறுமியின் பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் செஞ்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் பொன்னுசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.