நெல்லையில் ஜவுளிக் கடையிலிருந்து முதியவர் 10,000 ரூபாய் மதிப்புடைய துணிகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 60 வயதாகிறது. இதற்கிடையே பாளையங்கோட்டையில் இயங்கி வரும் மார்க்கெட் பகுதியில் நிறைய ஜவுளிக்கடைகள் உள்ளது.
இந்நிலையில் இவர் பாளையங்கோட்டையிலிருக்கும் மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் ஒரு துணிக்கடையில் 10,000 ரூபாய் மதிப்புடைய ஜவுளியை திருடி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் செல்லப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.