Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முதியவர் தற்கொலை…. மார்த்தாண்டத்தில் பரபரப்பு…!!

முதியவர் ஒருவர் உடல்நலம் சரியாகாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜமணி (வயது 70). வயதான இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகமல் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த முதியவர், வீட்டிலிருந்த விஷத்தை எடுத்துக்  கொண்டு பக்கத்திலுள்ள கோவில் பகுதிக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Categories

Tech |