Categories
தேசிய செய்திகள்

முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு……!!!!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பைபாஸ் சாலை அருகில் பரத் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் பிரியாணி கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து மறுநாள் காலை பிரியாணி கடைவாசலில் முதியவர் ஒருவர் தலை நசுங்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இன்ஸ்பெக்டர் ராமு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான காவல்துறையினர் கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறியபோது, “முதியவர் தலையில் பெரிய கல்லை போட்டு மர்மநபர்கள் கொலை செய்துள்ளனர். அவ்வாறு இறந்து கிடந்த முதியவரின் சடலம் அருகில் ஒரு பையில் துணிகளும், 3 ஒத்த செருப்புகளும் கிடந்துள்ளது. அதனை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தலை நசுங்கிய நிலையில் இருப்பதால் உயிரிழந்த முதியவர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. ஆகவே இது சமந்தமாக விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது” அவர் தெரிவித்தார்.

Categories

Tech |