கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் சின்னபிலவேந்திரன்(85) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாயராஜ் என்ற மகனும், செல்வராணி என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முதியவரை சகாயராஜ், செல்வராணி, மரிய செல்வத்தின் மனைவி மரிய ஸ்டெல்லா ஆகிய மூன்று பேரும் இணைந்து ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மூன்று பேர் மீதும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories