மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் எப்படி இணைவது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
நமக்கு வயதான பிறகு நம் குழந்தைகள் நம்மைப் பார்த்து கொள்வார்களா? கடைசி காலத்தை நாம் எப்படி ஓட்டுவது? என பயம் பலருக்கும் இருக்கும். கடைசி காலத்தில் மற்றவர்களை எதிர்பார்த்து நிற்காமல் நம்மை நம்மாலே பார்த்துக் கொள்ள முடியுமா? என்று பலரும் யோசித்து வருகின்றனர். இதற்காக பல பென்ஷன் திட்டங்களும், சேமிப்பு திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். இந்த திட்டம் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட முன்னணி வங்கிகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இதற்கு வட்டி விகிதம் 7.4 சதவீதமாகும். 55 வயது முதல் 60 வயது வரை உள்ள நபர், ஐந்து வருட காலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை இதில் திறக்க முடியும். ஆனால் இதற்கு 15 லட்சம் செலுத்தவேண்டும். இந்த கணக்கு முதிர்ச்சி அடைந்த பிறகு மேலும் மூன்று ஆண்டுகள் வேண்டுமானால் நீட்டித்துக் கொள்ளலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ஈட்டக்கூடிய வட்டி முழுமையாக வரி விதிக்கப்படகூடியது என்பது இதன் சிறப்பம்சமாகும். கொரோனா காரணமாக மக்கள் பலரும் நிதி நெருக்கடியை சந்தித்து வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். இதில் பலருக்கும் தங்களது எதிர்காலத்தை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் குடிமக்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைந்து இறுதி காலத்தில் பல நெருக்கடி இல்லாத வாழ்க்கையை வாழலாம்.