தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதரவற்ற மற்றும் உணவுக்கு வழியில்லாமல் வசிக்கும் முதியவர்களுடைய துன்பத்தை போக்கும் விதமாக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழக அரசு முதியோர் உதவி தொகை திட்டம். கணவன் அல்லது மனைவி போன்ற நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்களால் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
இவர்களுடைய துயரத்தை போகும் விதமாக தமிழக அரசு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கிய வருகிறது. இந்த நிலையில் முதியோர் உதவித்தொகை திடீரென்று ரத்து செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் இந்த நிலையில் முதியோர் உதவித் தொகை குறித்து பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர், கடந்த ஆட்சி காலத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களை ஒவ்வொரு வருடமும் குறைத்து வந்தது வழக்கமாக இருந்தது.
மேலும் ஒரே நேரத்தில் 400 பேர் தகுதியற்றவர்களாக தீர்மானிக்கப்பட்டு நீக்கப்பட்டனர். அவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தற்போது 2000 பேரை மீண்டும் இந்த திட்டத்தில் இணைத்துள்ளோம். இப்போதைக்கு புதிதாக ஒரு லட்சம் பேரிடம் மனுக்கள் பெறாமல் திட்டத்தில் இருப்பவரை மறு ஆய்வு செய்து தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் மீண்டும் உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி உதவி தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.