ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள கெமரோவோ நகரில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த முதியோர் இல்லம் முறையான அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஏராளமான முதியவர்கள் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் முன்தினம் இரவு இந்த முதியோர் இல்லத்தில் திடீரென தீ பிடித்தது. ஆனால் நள்ளிரவு நேரம் என்ற காரணத்தினால் முதியவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை.
இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாது நிலையில் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.