Categories
அரசியல் மாநில செய்திகள்

முதியோர் உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

அதன்படி நேற்று முன் தினம் திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதனையடுத்து முதியோர் உதவி தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற புதிய வாக்குறுதியை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Categories

Tech |