Categories
மாநில செய்திகள்

முதியோர் உதவித்தொகை 99% டாஸ்மாக் செல்கிறது – ராமதாஸ்…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது  மேலும் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஊரடங்கு தளர்வில் கொரோனா குறைந்து வந்ததால் டாஸ்மாக் திறக்க தமிழக அரசு அனுமதியளித்ததால், அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு பலரும் எதிர்ப்புகளும், போராட்டமும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதியோர் சிரமப்படாமல் வாழ்வதற்கு வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை 99% டாஸ்மாக் கடைகளுக்கு செல்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனவே உடனடியாக மதுக்கடைகளை மூடி முதியோர்களை நிம்மதியாக வாழ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |