தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்க்ளுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்தது. இதையடுத்து ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளும் முடிந்து, தற்போது அடுத்த கல்வி ஆண்டும் தொடங்கிவிட்டது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 65 வகையான முதுகலை, முதுகலை பட்ட டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்ற அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://b-u.ac.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 15 ஆகும்.
Categories