காவல்துறையினர் தங்கள் மீது தடியடி நடத்தியதாகவும், துன்புறுத்தியதாகவும், அவமரியாதையுடன் நடத்தியதாகவும், மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு 2020-ஆம் ஆண்டு நடக்க இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது.
இந்த தேர்வின் முடிவுகள் வந்த நிலையிலும், கவுன்சிலிங் இன்னும் நடத்த படாமலும், இடங்கள் ஒதுக்கப்படாமலும் இருக்கிறது. எனவே மருத்துவப் படிப்புக்கான அட்மிஷன் தாமதம் ஆவதாகவும் மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு அனைத்து இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கண்டித்து நாளை காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.