முதுகுளத்தூர் அருகே உள்ள மீசல் காலனி கிராமத்தில் இந்திய விவசாய சங்க தாலுகா குழு சார்பாக 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அருகே இருக்கும் மீசல் காலனி கிராமத்தில் அகில இந்திய விவசாய சங்க தாலுக்கா குழு சார்பாக 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிற்சங்க தாலுகா செயலாளர் அங்குதன் தலைமை தாங்க மார்க்சிஸ்ட் விவசாய தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் கணேசன், செயலாளர் முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இதில் 100 நாள் திட்ட வேலை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் விவசாய சங்க தொழிலாளர்கள் பங்கேற்றார்கள்.