முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 3,08,912 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 70.38% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் 101,901 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார்.
மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட கீர்த்திகா முனியசாமி 81,180 வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்ட எம்.முருகன் 19,669 வாக்குகள் பெற்றுள்ளார். இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் தலா 20,721 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தேசிய காங்கிரஸ் கட்சியினர் ஊரடங்கு விதிமுறைகளுடன் பாதுக்காப்பாக தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளனர்.