மத்திய பிரதேச மாநிலத்தில் சில்வாராயில் சந்தோஷ்குமார் சாஹீ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இடுப்புக்கு கீழ் சரியான செயல்பாடு இல்லை என்பதனால் இவர் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார். இவருக்கு முன்னி என்ற மனைவி இருக்கிறார். இவர்களிடம் ஒரு தள்ளுவண்டி இருந்தது. அதில் தன் கணவரை அமரவைத்து முன்னி தள்ளிக்கொண்டு சென்று சில்வாராவில் உள்ள கோயில்கள், மசூதிகள் அருகில் பிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வண்டியை தள்ளி தள்ளி மனைவிக்கு முதுகு வலிக்குது என்று வேதனையுடன் கூறியுள்ளார். மனைவியின் துயரத்தைத் தாங்க முடியாத கணவர் பிச்சை எடுத்து சேமித்து வைத்த பணத்தில் இருந்து ரூ.90,000 ஒரு பைக் வாங்கினார். இதன் மூலம் மனைவியுடன் வெளியூர்களுக்கு சென்று பிச்சை எடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.