Categories
தேசிய செய்திகள்

“முதுகு தண்டுவட சிதைவு”…. மருத்துவரின் முயற்சியால்…. “16 வயது சிறுவனுக்கு கிடைத்த மறுவாழ்வு”….!!!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முதுகு தண்டுவட சிதைவால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹிமேஸ்வர் என்பவர் சிறுவயது முதலே கைபோஸ்கோலியோஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இவருக்கு 12 வயது இருக்கும் பொழுது இந்த நோய் தீவிரமடைந்து இவரால் நிற்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமடைந்தது. நேராக நடக்க முடியாமல் பெரும் அவதிபட்டார். இதனால் இவரது ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவானது 48% இருந்தது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக இவர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் வாழ்ந்து வந்தார்.

பின்னர் இவருக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையாகும். இந்த அறுவை சிகிச்சை செய்யும்போது இதனுடன் இணைந்த நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால், கால்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்படும். இந்த அறுவை சிகிச்சையை சவாலாக ஏற்று எலும்பு மற்றும் இடுப்பு எலும்புகளில் உலோக மற்றும் வளையங்கள் பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்படி 2 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, தானாகவே நடக்கவும் முடிந்தது. 2-ம் கட்ட அறுவை சிகிச்சை முடிந்து சிறுவனுக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது. தற்போது அந்த சிறுவன் ஆக்சிஜன் உதவி இல்லாமல் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

Categories

Tech |