Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதுகு வலிக்கு மருந்து கொடுத்த தந்தை…. சிறுமிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

3 வயது சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மேட்டோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதுடைய மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக மேட்டோவின் மகள் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அருகில் இருக்கும் கடையில் மருந்து வாங்கி மேட்டோ தனது மகளுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் மதிய நேரத்தில் தூங்கி கொண்டிருந்த சிறுமி எந்தவித அசைவுமின்றி கிடந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவலின் படி ஆனைமலை காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமி இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |