பிரதமர் போரிஸ் ஜான்சனை அவரது முன்னாள் காதலி கடுமையாக திட்டி ட்விட் செய்துள்ளார்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே எனக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ஜான்சனின் முன்னாள் காதலி ஜெனிபர் என்பவர் மிகவும் கடுமையாக பிரதமர் போரிஸை திட்டியுள்ளார். அவர் திட்டிய போது அலெக்சாண்டர் என்ற பெயர் கொண்ட அவமானமே, அருவருப்பூட்டும் போரிஸ் ஜான்சனே, இதுவரை தேர்தல் முடிவுகள் வெளியாகாத நிலையில் நீ வெளியிட்ட ட்விட் உனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
உலகமே அதனை பார்த்துக்கொண்டிருக்கிறது. முதுகெலும்பில்லாதவன், எடுப்பார் கைப்பிள்ளை என மிகவும் கடுமையாக ஜெனிஃபர் போரிஸ் ஜான்சனை திட்டிருந்தார். போரிஸ் ஜான்சன் தனது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்த காலத்தில் ஜெனிபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர்களிடையே தவறான உறவு இருப்பதாகவும் பிரச்சனை வெடித்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என கூறியது.
10 பக்கங்களுக்கு போரிஸ் ஜான்சன் ஜெனிஃபர் திட்டி இருந்தார். நாட்டை முடக்கி விட்டார் என பட்டாசு போன்று வெடித்துவிட்டார் ஜெனிஃபர். அதோடு நீதி பொறுப்பில் வசிக்கும் ரிஷி போரிஸ் ஜான்சனை விடவும் நன்றாகவே ஆட்சி செய்வார் என கொளுத்தி போட்டுள்ளார். ஆனால் இதுவரை போரிஸ் ஜான்சன் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.