முதுநிலை ஆங்கில தட்டச்சு தேர்வில் ஆண்டிபட்டியைச் சேர்ந்த மாணவன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் சென்ற மார்ச் மாதம் இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு பயிற்சி தேர்வானது நடைப்பெற்றதில் தேனி மாவட்டத்திலும் நான்கு மையங்களில் நடந்தது. இத்தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தேர்வின் முடிவுகள் இன்று இணையத்தில் வெளியானதில் ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு தட்டச்சு பள்ளியில் படித்து தேர்வு எழுதிய சரவண புவனேஷ் என்ற மாணவன் முதுநிலை ஆங்கில தட்டச்சு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
இவருக்கு தட்டச்சு பள்ளியின் தாளாளர் பாலசுப்பிரமணியன், முதல்வர் உமாமகேஸ்வரி, பெற்றோர் உள்ளிட்டோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இந்த தட்டச்சு பள்ளியில் பயின்ற மாணவர்கள் இதுவரை எட்டு முறை மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.