Categories
மாநில செய்திகள்

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு…. உடனே பாருங்க…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு….!!!!

வருகின்ற 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர்கள் நிலை-1, உடற்கல்வி இயக்குனர் நிலை-1 உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான அட்டவணை 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கணினி வழி போட்டி தேர்வுக்கு இரண்டு வகையான ஹால் டிக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து அதனுடன் ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டை, விண்ணப்பித்த போது சமர்ப்பித்த பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை தேர்வு மையத்துக்கு எடுத்து வர வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., தலைவர் லதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |