தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்பிற்கு வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதல்நிலை கல்வியியல் (M.Ed)படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கலந்தாய்வு அக்டோபர் 18ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஆறாம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கி அக்டோபர் 12ம் தேதி முடிவடையும்.
பின்னர் தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் அக்டோபர் 18ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதுநிலை கல்வியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.