Categories
தேசிய செய்திகள்

முதுநிலை நீட் நுழைவுத்தேர்வு: செப்டம்பர்-11 இல் நடத்த முடிவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை  நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 11-இல் நடத்த முடிவு செய்து இருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா  தெரிவித்துள்ளார். இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்பம் 5 மணி முதல் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |