கோவை வேளாண் பல்கலையில் முதுநிலை பட்டம் மேற்படிப்பு பயிலகம் மூலமாக எட்டு கல்லூரிகளில் 32 துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. இந்த கல்வியாண்டுக்கான முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஜூன் 27ஆம் தேதி தொடங்கியது.
காலியாக உள்ள 400 இடங்களில் மாணவர்கள் https://admissionsatpgschool.tnau.ac.in/என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆக எட்டாம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.